close
Choose your channels

'ஏகே 61'  படத்தில் இணைந்த சூப்பர்ஹிட் படத்தின் ஹீரோ!

Wednesday, May 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் சூப்பர் ஹிட்டான படத்தின் ஹீரோ ஒருவர் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 61’ படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஏகே 61’ . இந்த படத்தில் மஞ்சுவாரியர், ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி கேரக்டரில் நடித்த ஜான் கொகேன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்..

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ’ராஜதந்திரம்’ என்ற சூப்பர்ஹிட் படத்டின் ஹீரோ வீரா, ’ஏகே 61’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ரான் இசையில் நிரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வெல்லகுட்டி படத்தொகுப்பில் சுப்ரீம் சுண்டர், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.