சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர்  “எமகாதகி” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Thursday,October 06 2022]

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

நைசாட் மீடியா ஒர்க்ஸ் & சாரங் பிரதர்ஸ் புரடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பில், ஜெசின் ஜார்ஜ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

More News

என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார்: 3 மாத கர்ப்பிணி நடிகையின் கதறல் வீடியோ!

என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்கும் நிறுவனம் இதுவா? டபுள் ஜாக்பாட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 

கமல், ரஜினிக்கு நன்றி சொன்ன கார்த்தி.. இதுதான் காரணம்!

 உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க தயார்.. 'நாயகன்' பட நடிகை பேட்டி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' என்ற திரைப்படத்தில் 'நான் சிரித்தால் தீபாவளி' என்ற பாடலுக்கு நடனமாடியவர் பிரபல கவர்ச்சி நடிகை பபிதா.

பாவாடை தாவணியை அடுத்து ஸ்லீவ்லெஸ் காஸ்ட்யூம்.. ரம்யா பாண்டியனின் அடுத்த போட்டோஷூட்!

 நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்