close
Choose your channels

மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் சூப்பர் சிங்கர் பிரியங்கா? விரைவில் வீடியோ ரிலீஸ்!

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாக்கிய ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் முறையாக ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசி உள்ளதாகவும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று தயாராகி இருப்பதாகவும் இந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘நெஞ்சே கேளு’ என்ற டைட்டில் உருவாகி வரும் புரமோஷன் பாடலில் ஆண்ட்ரியா மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் நடித்திருப்பதாகவும் கார்த்திக்ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப் பாடலின் படப்பிடிப்பு ஈசிஆர் கடற்கரை அருகே நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த பாடலின் வீடியோ விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘பிசாசு 2’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.