'தளபதி 63' படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சினிமாவிலும் பாடி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் சூப்பர்சிங்கர் சாம்பியன் பட்டம் வென்ற செந்தில், சினிமாவில் நடித்தும் பாடியும் வருகிறார்

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்திலும் ஒரு சூப்பர் சிங்கர் பிரபலம் இணைந்துள்ளார். அவர்தான் கப்பீஸ் பூவையர். ஜூனியர் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கானா மற்றும் கிராமத்து பாடல்களை பாடி பலருடைய பாராட்டுக்களை பெற்ற கப்பீஸ் பூவையர், 'தளபதி 63' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடுவதோடு, ஒரு சிறிய கேரக்டரிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் 'தளபதி 63' படத்தில் விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அர்ஜூன் ரெட்டி புதிய தமிழ் ரீமேக்கின் இயக்குனர் யார்?

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் சென்சார் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு

உன் லெவலுக்குத்தான் வாலாட்டனும்: Mr.லோக்கல் டீசர் விமர்சனம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்; திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கல்லூரி வளாகத்தில் பீர்பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட மாணவிகள்: வைரலாகும் வீடியோ

ஒடிசா மாநிலத்தில் புரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் கையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவு அளிப்போம்: நடிகர் சங்கம் அறிக்கை

காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.

விஷாலின் 48 மணி நேர சாதனை

விஷால், ராசிகண்ணா நடிப்பில் ஏஆர் முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கி வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.