close
Choose your channels

'நானே வருவேன்' படத்தின் 'வீரா சூரா' பாடல்: யுவனுடன் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்!

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘வீரா சூரா’ என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவரும் பாடியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது 

நடிகர் தனுஷ் வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடித்த ’நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெறும்  ‘வீரா சூரா’என்ற சிங்கிள் பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியிருக்கிறார் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான முத்துச் சிப்பியும் பாடியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.