close
Choose your channels

'சூப்பர் சிங்கர்' முத்துச்சிப்பிக்கு வாய்ப்பு கொடுத்த பிரபல இசையமைப்பாளர்: இன்று பாடல் ரிலீஸ்

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முத்துச்சிப்பிக்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பாட வாய்ப்பு கொடுத்து உள்ளதாகவும் அந்த பாடல் இன்று வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் முத்துச்சிப்பி. இவர்தான் டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருக்கு நான்காவது இடமே கிடைத்தது. இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முத்துச்சிப்பி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் பாடியுள்ள நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது இசையில் உருவாகும் ஒரு படத்தில் பாடலை பாடும் வாய்ப்பை முத்துசிற்பிக்கு அளித்துள்ளார்.

சசிகுமார் நடித்த ’காரி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை முத்துச்சிப்பி பாடியிருப்பதாகவும், அந்த பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் டி.இமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முத்துச்சிற்பிக்கு பாட வாய்ப்பளிப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்த டி இமான், அந்த வாக்குறுதியை தற்போது காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துச்சிற்பியின் குரலில் உருவாகிய பாடலை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.