close
Choose your channels

ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் சூப்பர் சிங்கர் பூஜா.. வைரல் புகைப்படங்கள்..!

Monday, March 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஆகியவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 9 தொடங்கிய நாள் முதலே பூஜா வெங்கட்ராமன் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார் என்பதும் இவருக்காக டிஜே பிளாக் தனி சிரத்தை எடுத்து பாடல்களை போட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பூஜாவின் பெரியம்மா செய்த பிராங்க் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பூஜா ஏற்கனவே ஒருசில திரை உலக பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் சிறுவயதிலேயே மேடையில் பாடியதற்காக பூஜா பரிசு பெற்றுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஒரு பாடலில் கோரஸ் பாடகிகளில் ஒருவராக பூஜா பாடியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பாடலின் ஒலிப்பதிவின்போது இவர் ஏஆர் ரஹ்மானுடன் பூஜா புகைப்படம் எடுத்துள்ளார்.

மொத்தத்தில் பூஜா சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் வெல்வார் என்றும் அதன் பிறகு அவர் திரையுலகிலும் பல பாடல்களை பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.