ராதாரவியுடன் இணைந்து நடிக்கும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: டைட்டில் - இயக்குனர் அறிவிப்பு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ராஜலட்சுமி தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் அவருடைய கணவரும் பாடகருமான செந்தில் ஒரு சில படங்களில் பாடியுள்ளார் என்பதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ‘லைசென்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்றும், பெண்களின் மேன்மையை இந்த படம் எடுத்து வைக்கும் வகையில் கதையம்சம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ராதாரவியின் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் ராஜலட்சுமிக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

திடீர் விசிட் அடித்த சூர்யா. ஆச்சரியத்தில் சூப்பர் ஸ்டார் படக்குழு!

சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென நடிகர் சூர்யா சென்றது அந்த படக்குழுவினர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாரா லோகேஷ் கனகராஜ்: யாருடைய படத்தில்?

சூர்யா உள்பட ஒரு சில பிரபலங்களை தனது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

2 முன்னணி நாயகிகளுடன் ஜெயம் ரவி படம்: இன்று முதல் படப்பிடிப்பு!

இரண்டு முன்னணி நாயகிகளுடன் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுவா? 

2022 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடித்த 'கடைசி விவசாயி' 'காத்துவாக்குல ரெண்டு காதல்' 'விக்ரம்' மற்றும் 'மாமனிதன்' ஆகிய படங்கள் வெளியானது என்பதும் இந்த நான்கு படங்களுமே

இரட்டை குழந்தைகளுக்காக முதல்முறையாக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா?

நடிகை நயன்தாரா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வெளிநாட்டிற்கு விக்னேஷ் சிவன் உடன் சென்று கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்லவில்லை