close
Choose your channels

நாட்ல 60% பேர் கெட்டவன் தான், எல்லாரையும் துப்பாக்கியில சுட்ருவியா? 'லைசென்ஸ்' டிரைலர்..!

Tuesday, May 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்த ‘லைசென்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ராஜலட்சுமி இந்த திரைப்படத்தில் ஒரு ஆசிரியர் ஆக நடித்து உள்ளார். அவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆசிரியை எதற்காக துப்பாக்கி லைசென்ஸ் கேட்டார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சற்றுமுன் வெளியாகி உள்ள ‘லைசென்ஸ்’ படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

ராஜலட்சுமி, ராதா ரவி, அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயற்றியுள்ளார். பாஜ்ஜு ஜேக்கப் இசையில் காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது

சின்னத்திரை உலகில் புகழ் பெற்ற ராஜலட்சுமி, பெரிய திரையில் ‘லைசென்ஸ்’ படத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த படம் அவருக்கு வெற்றி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.