close
Choose your channels

மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்த பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் மனைவி!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் மனைவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கெளரிகான் சமீபத்தில் ’காபி வித் கரன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷாருக்கானின் மனைவி கௌரி கான் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி குறித்த புரமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த வீடியோவில் உங்கள் மகள் சுஹானாகானுக்கு டேட்டிங் குறித்து நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, ‘ஒருபோதும் ஒரே நேரத்தில் இரண்டு பையன்களை டேட்டிங் செய்யாதே என்று கூறுவேன்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் இணைய தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos