close
Choose your channels

போனிகபூரை சந்தித்த பிரபல சூப்பர் ஸ்டார்:  ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுத்துள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை, ‘வலிமை’ ஆகிய படங்களை தயாரித்த நிலையில் அஜீத் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தையும் அவர்தான் தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகை அடுத்து மலையாள திரையுலகில் போனிகபூர் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை போனிகபூர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து, போனி கபூர் தயாரிப்பில் மோகன்லால் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos