இடதுகால் தசைநார் சேதம்: 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

இடது காலில் தசைநார் சேதமடைந்த நிலையில் அந்த அதற்கு 21 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் சிகிச்சை செய்யாமல் இருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ் மலையாளம் உள்பட பல மொழிகளில் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வருபவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்தது. இவரது படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கேரளாவில் மட்டுமின்றி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டி சமீபத்தில் கோழிக்கோடு என்ற பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ’தனக்கு இடது கால் தசைநார் 21 ஆண்டுகளுக்கு முன்பு சேதமானதாகவும் அதற்கு தான் 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யவில்லை என்றும் கூறினார். இடது கால் தசைநார் சரி செய்ய வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள் என்றும் ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும் அதை வைத்து தன்னை கிண்டல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதாலும் இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு 21 ஆண்டுகளாக சிகிச்சை செய்யாமல் மம்முட்டி இருப்பது குறித்த தகவல் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்!

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்… மல்யுத்தப் பிரிவில் சாதனை படைத்த வீரர்!

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் ரவி குமார் தாஹியா அரையிறுதியில்

கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்துங்கள்… கோரிக்கை வைக்கும் WHO… ஏன்?

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதை உலக நாடுகள் குறைந்தது

பாலியல் புகாரளித்த பெண்....! அநியாயத்திற்கு ஆதாரம் கேட்ட பல்கலைக்கழகம்......!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தற்கு, ஆதாரம் கேட்டுள்ளது அந்த நிர்வாகம்.

ஹாக்கியில் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு… அசத்தும் பஞ்சாப்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் வெற்றிப்பெற்று