ஒரிஜினலாவே நான் வில்லன்ம்மா: சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்பகால படங்கள் போன்ற அட்டகாசமான அறிமுக காட்சி இந்த படத்தில் இருக்கும் என்பது ’தலைவா’ என்ற பின்ன்ணி குரலுடன் வரும் அறிமுக காட்சியில் இருந்து தெரியவருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தொடங்கும் இந்த அறிமுகக் காட்சி ”போலீஸ் ஆபீஸரா சார் அவன், கொலைகாரன்’ என்ற பின்னணி குரலுடன் அட்டகாசமான அறிமுகக் காட்சி இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது
மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் என்ற அதிரடி போலீஸ் கேரக்டரை பார்க்க்கும்போது ‘மூன்றுமுகம்’ படத்திற்கு பிறகு மிகப் பொருத்தமான ஒரு ஆக்ரோஷமான போலீஸ் கேரக்டர் அவருக்கு இந்த படத்தில்தான் பொருந்தி இருக்கிறது என்று கூறலாம் இளமையான கம்பீரத் தோற்றம், வழக்கமான ஸ்டைல், நயன்தாராவுடன் ரொமான்ஸ் என ஒருபக்கம் ரசிகர்களை திருப்தி செய்திருக்கும் இந்த படம் இன்னொரு பக்கம் அதிரடி ஆக்ஷன் ரசிகர்களையும் நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆக்ரோஷமான வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் சுனில்ஷெட்டி இந்த படத்திற்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிக்கும் வகையில் இருக்கும் அதே நேரத்தில் ரொமான்ஸ் மட்டுமன்றி படத்தின் கதையிலும் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது டிரைலரின் ஒருசில காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது.
கேம் ஆட்றாங்களா? நம்மகிட்டவே’ என்ற பஞ்ச் வசனம், டிரைலரின் இறுதியில் ’என்ன பாக்குற ஒரிஜினல் ஆகவே நான் வில்லன்ம்மா, இது எப்படி இருக்கு’ என்ற பஞ்ச் வசனமும் இறுதியில் ‘ஐ எம் அ பேட் காப்’ என்ற வசனமும் ரஜினி ரசிகர்களுக்கான கொண்டாட்ட காட்சிகள்.
மொத்தத்தில் ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகர் ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இந்த ‘தர்பார்’ திரைப்படம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout