சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? 

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதையும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருவதாகவும் தெரிகிறது.

இந்த இந்த நிலையில் இந்த படம் இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் ரூபாய் 48 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 21 கோடி வசூல் செய்துள்ளதாகவும் வாரிசு திரைப்படத்தின் முதல் நாள் வசூலை இந்த படம் முறியடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவுக்கும் தமிழகத்தில் இந்த படம் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என்பதும் 9 மணிக்கு தான் முதல் நாள் காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்துள்ளது. கர்நாடகாவில் 8.75 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கேரளாவில் 6 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தெலுங்கு மாநிலங்களிலும் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாகவும் வட இந்தியாவில் இந்த படம் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் ரூ.48 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் சுமார் 80 கோடி ரூபாய்க்கும் மேல் முதல் நாளில் வசூல் ஆகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கமல்ஹாசனின் 'தசாவதாரம்' பட நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் உத்தரவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தசாவதாரம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும்

பிகினி உடை.. தண்ணீருக்குள் ஜாலி.. அமலாபாலின் கோவா போட்டோஷூட்..!

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்

'ஜெயிலர்' வசந்த் ரவியின் அடுத்த படத்தில் அஜித் பட நடிகை தான் நாயகியா? இன்னொரு ஹீரோயின் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா

இளம் இசையமைப்பாளர், பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்கிறாரா? வேகமாக பரவும் வதந்தி..!

தமிழ் திரை உலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் ஒருவர் பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில்  ஒரு செய்தி வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா? விஷால் அளித்த விளக்கம்..!

நடிகர் விஷால், நடிகை லட்சுமிமேனனை திருமணம் செய்ய போவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.