close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' படம் குறித்த செம அப்டேட்!

Tuesday, July 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கான பிரமாண்டமான செட் அமைக்கும் பணியை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்த செட்டில் தான் பல முக்கிய காட்சிகள் படமாக்கப் போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ரஜினியுடன் நெல்சன் ‘ஜெயிலர்’ படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து ஆலோசனை செய்து இறுதிகட்ட ஸ்கிரிப்ட் அமைக்கும் பணியை முடித்துவிட்டதாகவும், அடுத்தகட்டமாக இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வை நெல்சன் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ஐஸ்வர்யாராய், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அனிருத் இசையில் உருவாகயிருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos