விஜயகாந்த் எப்படி இருக்காரு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்பட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் உடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? என்று ரஜினிகாந்த் கேட்டதாகவும் அதற்கு சுதிஷ், ‘விஜயகாந்த் நல்ல உடல் நிலையில் இருக்கிறார் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

More News

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 10, 11, 12 வகுப்புகளின் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்

கைது செய்யப்படுகிறாரா மீராமிதுன்? ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு!

பிக்பாஸ் 3வது சீசன் போட்டியாளரும், சூப்பர் மாடலுமான மீராமிதுன், பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும்போதே சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டார்.

சக்ரா படத்தை ஓடிடிக்கு விற்க சென்னை ஐகோர்ட் தடை: பரபரப்பு தகவல்

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சர்வதேச விண்வெளி நிலையத்தை லைட்டா நகர்த்தி வைத்த விஞ்ஞானிகள்!!!  காரணம் இதுதான்…

பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில் பெரும்பாலானை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதில்லை.

உயர்தர மருத்துவக் கருவிகளைக் கொண்டு கொரோனாவிற்கு தீவிர சிகிச்சை வழங்கும் தமிழக அரசு!!!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.