close
Choose your channels

இந்திய சூப்பர் ஸ்டார் படத்திற்கு வாழ்த்து கூறிய நம்மூர் சூப்பர் ஸ்டார்

Thursday, August 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டரை நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப்புடன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள எஸ்.ஜே.சூர்யா அப்போது உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக அமிதாப் தமிழில் அறிமுகமாகும் 'உயர்ந்த மனிதன்' படத்தின் குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்றை எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய என்னுடைய நண்பர் அமிதாப்பச்சன் அவர்கள் தமிழ்ப்படத்தில் நடிப்பது தமிழ்ப்படவுலகிற்கே பெருமை. அதேபோல் இந்தியில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.