close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினியின் 47 வயது நண்பர் இவர்தான்: வைரல் புகைப்படம்

Sunday, August 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது 47 வயது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி கடந்த சில நாட்களாக தீவிரமாக வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் டெல்லியில் அவர் பத்து கிலோமீட்டர் ஓடிய வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பதும், அந்த வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது உடலை ஃபிட்டாக வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் தனது பிட்னஸ் பயணத்தில் பங்காற்றிய தனது நண்பர் சுரேஷ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

எனது உண்மையான அமைதியான நண்பர் என்றும் 47 வயதாகும் இவர் என்னுடன் 50 கிலோமீட்டர் சைக்கிளிங் வந்தார் என்றும் வயது அதிகரிக்க அதிகரிக்க கிலோமீட்டரில் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபிட்னஸ் டிரைனர் சுரேஷ்குமாருடன் ஐஸ்வர்யா ரஜினி எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.