மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: மகள் செயலியில் மெசேஜ்!

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக தனது மகளின் செயலில் குரல் மூலம் மெசேஜ் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. வீடு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்ததாகவும், அதேபோல் ரஜினி வீட்டின் வாசலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் செயலி மூலம் ரஜினிகாந்த் ஆடியோவை பதிவு செய்துள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அவருக்கு ரத்த திசுநாளங்களில்

கமல் முன்னிலையில் சண்டை போடும் நிரூப்-அக்சரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 28வது நாளாக இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சற்று முன் வெளியான இரண்டாவது

மருத்துவமனையில் ரஜினியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும்

வருங்கால பைக் சாம்பியன்: குட்டித்தல க்யூட் புகைப்படம் வைரல்!

தல அஜித் நடிகர் மட்டுமின்றி பைக் ரைடிங் செய்வதில் வல்லவர் என்பதும் தற்போது அவர் உலகை பைக்கில் உலகை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அதற்கு பயிற்சி நடவடிக்கையாக வட இந்தியாவில்

முதல் வருட திருமண நாள்: காஜல் அகர்வாலின் க்யூட் இன்ஸ்டாகிராம் பதிவு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து தனது கணவருக்கு க்யூட்டான இன்ஸ்டாகிராம் மெசேஜ் ஒன்றை பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது.