ஆன்மீகத்தில் ரஜினிகாந்த் குடும்பம்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது குடும்பத்தினர் முழுவதுமே ஆன்மீகத்தில் மூழ்கியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா, மருமகன் விசாகன், பேரன்கள் ஆகியோர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் இரண்டு ஆன்மிகவாதிகளும் உடன் உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் முழுவதுமே நெற்றியில் பட்டையிட்டு குங்குமப் பொட்டு வைத்து ஆன்மீக கடலில் மூழ்கி உள்ளது போல் உள்ளது. ரஜினி மட்டுமின்றி அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் ஆன்மீகத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளதை இந்த புகைப்படம் தெளிவாக்குகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய் பட நாயகி: வைரல் புகைப்படங்கள்!

விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

'தளபதி 66' படத்தில் முக்கிய மாற்றம் செய்த விஜய்: வேறு வழியின்றி ஏற்று கொண்ட படக்குழு!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய் ஒரு முக்கிய மாற்றத்தை கூறியதாகவும் அந்த மாற்றத்தை படக்குழுவினர் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தளபதி 66: விஜய் சகோதரராக 90களின் வெள்ளிவிழா நாயகன்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் 90களில் வெள்ளி விழாப் படங்களை கொடுத்த நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்… சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபல இயக்குநர்!

கன்னட சினிமா இயக்குநராக அறிமுகமாகி தற்போது கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பான் இந்தியா இயக்குநராக உலகம்

இதுவரை தமிழ்ப்படம் வெளியாகாத நாடு: முதல் படமே 'பீஸ்ட்' தான்!

இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாட்டில்  முதல் முறையாக 'பீஸ்ட்' என்ற தமிழ் திரைப்படம் வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.