close
Choose your channels

ரஜினி குடும்பத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் இன்னொரு நபர்.. யார் தெரியுமா?

Thursday, June 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பமே ஒரு கலை குடும்பம் என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் இயக்குனர்கள் என்பதும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நபர் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இலங்கையைச் சேர்ந்த பிரில்லியண்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தில் தான் சத்திய நாராயண ராவ் நடிகராக அறிமுகமாகிறார்.

ரஜினியின் மூதாதையர் ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பத்தில் ரஜினியின் பெற்றோர் நினைவிடத்தில் பூஜையுடன் சத்தியநாராயணா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா தமிழ் திரையுலகில் நடிக்க வந்ததை அடுத்து அவருக்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.