திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பிய ரஜினிகாந்த்.. எங்கே சென்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவர் இன்று திடீரென சென்னையில் இருந்து மாலத்தீவு தலைநகரான மாலே என்ற நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்று உள்ளார்.

இந்த தகவலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே தமிழ் உட்பட இந்திய திரை உலகினர் பலர் சமீபத்தில் மாலத்தீவு சென்று வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் ரஜினிகாந்த்தும் மாலத்தீவுக்கு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ மற்றும் ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை அடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ’ஜெயிலர்’ ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை அடுத்து ஒரு சில மாதங்களில் ’லால் சலாம்’ படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மாவீரன்' பாசிட்டிவ் விமர்சனம்: சிவகார்த்திகேயன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த சங்கீதா விஜய்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா? சாய்பல்லவியின் காஷ்மீர் போட்டோ ஷூட் வைரல்..!

நடிகை சாய் பல்லவி தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு நேரம் போக மீதம் உள்ள நேரத்தில் காஷ்மீரின் கொள்ளை அழகை புகைப்படமாக எடுத்து பதிவு செய்து வருகிறார்.

'சிம்பு 48' படத்தின் லுக் இதுதானா?  மாஸ் புகைப்படம் வைரல்..!

நடிகர் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சிம்பு 48' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஏஐ-வரவால் 90% ஊழியர்களை பணிநீக்கம் செய்த முக்கிய நிறுவனம்… திடுக்கிடும் தகவல்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொழில்நுட்ப துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை… வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற 10 சினிமா பிரபலங்கள்!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல சினிமா பிரபலங்கள் வயது, உடல்நிலை எனப் பல்வேறு காரணங்களுக்காக வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளனர்.