close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த': நாளை இரட்டை விருந்து!

Thursday, September 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் காலை 11 மணிக்கும், ‘அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் நாளை ‘அண்ணாத்த’ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து என்பது உறுதியாகியுள்ளது. மேலும் அண்ணாத்தை படத்தில் சூப்பர் ஸ்டில் ஒன்றும் வெளியிடப்பட்ட நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.