close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் 'வா சாமி' பாடல் அப்டேட்!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளன என்பதும் அதேபோல் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது நான்காவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ’வா சாமி வா’ என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியாக இருக்கும் இந்த பாடலை கேட்க ரஜினி மற்றும் இமான் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

டி இமான் இசையில் முகேஷ் முகமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி மற்றும் கீழக்கரை சம்சுதீன் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos