சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' மாஸ் மோஷன் போஸ்டர்!

  • IndiaGlitz, [Friday,September 10 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

அட்டகாசமான ஆக்ஷன் காட்சியின் ஆரம்பமாக இருக்கும் இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அண்ணாத்த’ படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்ட் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்டாலும், இந்த படத்தில் ஆக்சனும் உள்ளது என்பதை இந்த மோஷன் போஸ்டர் நிரூபித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.