close
Choose your channels

ரீரிலீஸாகும் 'பாபா' ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் புதிய ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ‘பாபா’. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி தயாரித்த ரஜினிகாந்த், ரீரிலிஸ் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து இந்த படம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றப்பட்டு புதிதாக எடிட்டிங் செய்யப்பட்டது. மேலும் ஒரு சில காட்சிகளுக்கான பின்னணி இசை மற்றும் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளன. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘பாபா படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.