ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த பிரபலம்: அவரே பதிவு செய்த டுவிட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ படத்தின் டைட்டில் ’ஜெயிலர்’ என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் இது குறித்து வெளியான போஸ்டர் இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்பட ஒருசில நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான ’ஜெயிலர்’ படத்தின் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிரபல கலை இயக்குனர் டிஆர்கே கிரன், ‘எனது கனவு’ என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மற்றும் கலை இயக்குனராக இருந்து வரும் இவர் ’ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றாரா? அல்லது இந்த படத்தில் கலை இயக்குனராக பணி செய்ய உள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வெளிநாட்டில் அஜித்தின் பைக் பயணம்: எந்த நாட்டில் தெரியுமா?

நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பயணம் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் அஜித் பைக்

பிரபல இயக்குனரின் படத்தில் நடிகையாகிறார் 'குக் வித் கோமாளி' கனி!

'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி, பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். 

தமிழ் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'அவன் இவன்' மதுஷாலினி!

பாலாவின் 'அவன் இவன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை மதுஷாலினி தமிழ் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கோலமாவு கோகிலா' படத்தின் ஹிந்தி ரீமேக் ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினிகாந்த் - ஏவிஎம் சரவணன் திடீர் சந்திப்பு: 'சிவாஜி 2' உருவாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ஏவிஎம் சரவணன் தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்ததை அடுத்து 'சிவாஜி 2' உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.