'ஜெயிலர்' படத்தின் ரன்னிங் டைம்.. அண்ணாத்த படத்தின் அதே ரன்னிங் டைம்?

  • IndiaGlitz, [Wednesday,August 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வந்துள்ளது

’ஜெயிலர்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் என்றும் இரண்டாவது பாதி ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் முந்தைய படமான ’அண்ணாத்த’ 2 மணி நேரம் 43 நிமிடங்கள் என்று இருந்த நிலையில் அந்த படத்தை விட 2 நிமிடங்கள் மட்டுமே ’ஜெயிலர்’ படம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்

More News

'தளபதி 68' படத்தில் ஒரு பிக் நியூஸ்.. வெங்கட்பிரபு சொன்னதை கேட்டு ஷாக் ஆயிட்டேன்: கங்கை அமரன்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான 'தளபதி 68' திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார்

தமிழில் 'லியோ' தான் இரண்டாவது படம்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கு..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக

இமயமலை செல்லும் முன் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினிகாந்த்: வீடியோ வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று அவர் இமயமலை கிளம்பி சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இமயமலைக்கு செல்லும் முன் பேட்டியளித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இன்று அவர் இமயமலை செல்கிறார்.

'தளபதி 68' படம் ஒப்பந்தமானதும் அஜித் செய்த முதல் வேலை.. வெங்கட் பிரபு பேட்டி..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆனதும் தனக்கு முதல் வாழ்த்து அஜித்திடமிருந்து தான் கிடைத்தது என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.