சென்னை திரும்பிவிட்டார் ரஜினிகாந்த்: 'தலைவர் 170' படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றார் என்பதும் அந்த பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டார்

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பி விட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ஏற்கனவே அமிதாப்பச்சன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் நிலையில் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் ‘தலைவர் 170’ படமும் ’ஜெயிலர்’ போலவே சூப்பர் ஹிட்டாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மை3  சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் “மை3” சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகியுள்ளது.

உங்களுக்கு என் ஜோக் புரியவில்லை என்றால் வளருங்கள்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ்ராஜ்..!

சந்திராயன் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ்

ஆகஸ்ட் 28 முதல் 'இதயம்' சீரியல்.. ஜீ தமிழ் வெளியிட்ட அறிவிப்பு 

சின்னத்திரையில் புதிய சீரியல்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 'இதயம்' என்ற சீரியல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பாடகர்களை திரையுலகிற்கு தந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள்,  கலந்து கொள்ளும்  இந்த  சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி

என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். பிரபல நடிகை மீது கணவர் குற்றச்சாட்டு..!

பொதுவாக நடிகைகள் தான் தங்கள் கணவர் தங்களை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறுவது உண்டு. ஆனால் ஒரு நடிகையின் கணவர் தன்னை நிர்வாணமாக்கி தனது மனைவி