close
Choose your channels

ரஜினி-சிறுத்தை சிவா படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள்

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ஒருசில நாட்களிலேயே அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துவிட்டது

ரஜினியின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக வெளிவந்த அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் நடிகை ஜோதிகா. இவர் ஏற்கனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ என்ற மெகா ஹிட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் சமீபத்தில் தேசிய விருது பெற்ற கீர்த்திசுரேஷ். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினி இமயமலையில் இருந்து சென்னை திரும்பியதும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz