'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?

  • IndiaGlitz, [Wednesday,August 17 2022]

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக்கிய ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், முதல்கட்டமாக செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள 10 பேர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான அரங்கில் இந்த படத்தின் ஆடியோ விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்த ஆடியோ விழாவில் வருவதற்கு அவர் ஒப்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

More News

'பொன்னியின் செல்வன்' செகண்ட் சிங்கிள்: பாடல் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'தேங்க் யூ ஷங்கர் சார்': அதிதி ஷங்கரின் பிறந்தநாள் வாழ்த்து டுவிட்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் உள்பட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அதிதியிடம் தோல்வி அடைந்த கார்த்தி: வைரல் வீடியோ

கார்த்தி, அதிதிஷங்கர் நடித்த 'விருமன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் அவர்களது

54 வயதில் திருமணமா? பிரபல தமிழ் நடிகர் விளக்கம்!

 54 வயதான பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் என ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த செய்திக்கு அந்த நடிகர் விளக்கமளித்துள்ளார்.

'விக்ரம்' ரிலீஸ் ஆன அதே தேதி: மீண்டும் ரூ.500 கோடி மேஜிக் நடக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 500 கோடி வசூல்