ரஜினிகாந்த் - வேல்ஸ் பிலிம்ஸ் படம்.. இயக்குனர் இந்த இருவரில் ஒருவரா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், "ரஜினியின் அடுத்த படம் என்ன?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது அவருடைய அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இயக்குநர்கள் எச் வினோத் மற்றும் எஸ்யூ அருண்குமார் ஆகிய இருவரும் ரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறார்கள். இந்த இருவரில் ஒருவர் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச் வினோத் தற்போது விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், அந்த படத்தை முடித்தவுடன் அவர், ரஜினி படத்தில் கமிட்டாக வாய்ப்பு பெறுவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சமீபத்தில் வெளியான 'வீர தீர சூரன் 2' என்ற படத்தை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார், அந்த படத்தின் முதல் பாகத்தை முடித்தவுடன் ரஜினி படத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த இருவரில் யார் ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com