சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒருநிமிட பேட்டி!

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுக்களின் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் மிகப்பெரிய ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். இந்த படத்தின் அறிமுக பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இன்று காலை அவர் சென்னை திரும்பினார்

ரஜினிகாந்த் வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள் அவரது பேட்டிக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். ரஜினிகாந்த் நேராக பத்திரிகையாளர்கள் நோக்கி வந்து ’அனைவருக்கும் என்னுடைய அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று ஒரே ஒரு நிமிடம் மட்டுமே பேட்டி கொடுத்து விட்டு திரும்பி விட்டார். இருப்பினும் விரைவில் அவர் செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டி ஒன்றை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

சுலைமானி உடல் அடக்கம்..அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி பறந்த ஈரான் ஏவுகணைகள்..!

ஈராக் இராணுவ தளபதியான சுலைமானியின் இறப்புக்கு காரணமான அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தலைவர் பேனருக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவணும்.. சேலத்திலிருந்து ரஜினி ரசிகர்.

தர்பார் படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் ரஜினியின் கட்டவுட்டிற்கு பூ தூவ திட்டமிட்டிருக்கிறார் சேலத்தை சேர்ந்த கனகராஜ். 

முதல்முறையாக யோகிபாபுவின் வித்தியாசமான முயற்சி!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்

10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அரசு  உத்தரவு: அதிர்ச்சி காரணம்

சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

செல்போன் பேசிக்கொண்டே தெருவில் நடந்த சென்ற பெண் தீப்பிடித்து பலி: சென்னையில் பயங்கரம்!

சென்னையில் தெருவில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது திடீரென தீ பிடித்ததால் அந்தப் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது