நண்பர் நடித்த படத்தை குடும்பத்துடன் வந்த பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நீண்டகால நண்பரான மோகன் பாபு நடித்த 'கண்ணப்பா' திரைப்படத்தை, ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் பாபுவும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், மோகன் பாபு மற்றும் அவரது மகன் விஷ்ணு மஞ்சு இணைந்து நடித்த 'கண்ணப்பா' திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில், மகாதேவ சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், கண்ணப்பா கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சுவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சரத்குமார், மதுபாலா, கருணாஸ், பிரம்மானந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தார். அவரை மோகன் பாபு வரவேற்றார்.
படம் பார்த்து முடித்தவுடன், "படம் சூப்பர்" என்று ரஜினிகாந்த் கூற, அவரது மனைவி லதா ரஜினிகாந்த், "இசையும் மிகவும் அருமையாக இருக்கிறது" என்று தெரிவித்தார். அதன் பிறகு இருவரும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விடைபெற்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
’கண்ணப்பா’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!
— Nikil Murukan (@onlynikil) June 16, 2025
ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு! pic.twitter.com/X1P9eKSAAh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments