கிராமத்தான் கோபப்பட்டு பார்த்ததில்லையே: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' டீசர்!

  • IndiaGlitz, [Thursday,October 14 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்றுமுன்னர் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த டீஸரில் முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்சன் மற்றும் அட்டகாசமான காட்சிகள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கிராமத்தான் குணமாத்தானே பார்த்திருப்ப, கோபப்பட்டு பார்த்ததில்லையே. காட்டாறு அவனுக்கு கதையும் கிடையாது தடையும் கிடையாது’ என்ற சூப்பர் ஸ்டாரின் வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டீஸர் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டீசரின் ஒவ்வொரு காட்சியிலும் பெரும் கூட்டம், ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் துணை நடிகர்கள் என படம் முழுவதும் பரபரப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் ஆக்ஷன் காட்சிகள் இதுவரை இல்லாதவகையில் பிரமாண்டமாகவும், பெரும் பொருட்செலவிலும் அதிரடியாக இருப்பதை பார்க்கும்போது இருபது வருடத்திற்கு முந்தைய ரஜினியை இந்த படத்தில் நிச்சயம் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி விருந்து காத்திருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம்.