ஜெயலலிதாவிடம் பேசி உங்கள் மதிப்பை குறைத்து கொள்ள வேண்டாம்: கிங் மேக்கர் குறித்து ரஜினிகாந்த்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜெயலலிதாவிடம் பேசி உங்கள் மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கிங் மேக்கர் தன்னிடம் கூறியதாக ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் எம் வீரப்பன் கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி காலமான நிலையில், ஒரு ஆண்டு நினைவு தினத்தில் அவரைப் பற்றி ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
"பாட்ஷா படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசியபோது, அப்போது அமைச்சராக இருந்த ஆர் எம் வீரப்பன் மேடையில் இருந்தார். ஒரு அமைச்சரை வைத்துக்கொண்டு அதைப் பற்றி பேசக்கூடாது என்பது எனக்கு அப்போது தெளிவாகத் தெரியவில்லை.
நான் அவ்வாறு பேசியதால், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆர் எம் வீரப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். இது குறித்த செய்தி எனக்கு தெரிந்த போது, நான் மிகவும் அதிர்ச்சியாகி விட்டேன். ‘என்னால்தான் இப்படி நடந்துவிட்டது, என்னால்தான் அவருக்கு அமைச்சர் பதவி போய்விட்டது’ என்று எண்ணி, இரவெல்லாம் தூங்கவில்லை.
மறுநாள் காலை ஆர் எம் வீரப்பனுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்ட போது, அவர் ஒன்றுமே நடக்காதது போல என்னிடம் பேசினார். என்னால் அவர் அமைச்சர் பதவியை இழந்ததை அவர் ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
அப்போது நான் அவரிடம், 'நான் வேண்டுமானால் ஜெயலலிதாவிடம் பேசட்டுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதெல்லாம் வேண்டாம். அவர் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, அதை மாற்ற மாட்டார். நீங்கள் பேசி உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ள வேண்டாம். அப்படி ஒரு மந்திரி பதவி எனக்கு தேவையில்லை' என்று கூறினார்.
அவர்தான் ஒரு அற்புதமான மனிதர். ரியல் கிங் மேக்கர்," என்று புகழ்ந்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும் , இது ரொம்ப முக்கியமான காரணம் ...
— Binary Post (@BinaryPost001) April 9, 2025
திரு.R.M.வீரப்பன் அவர்களைப் பற்றி தலைவர் ... #RMVeerappan #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #Baasha #Jayalalitha @rajinikanth #BinaryPost
April 09,… pic.twitter.com/TB1HbsG70K
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments