சென்னை வந்ததும் ரஜினிகாந்த் செய்த முதல் பணி: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. மேலும் விரைவில் அவர் ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அதனை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்றும் நமது தலைவர் தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் இன்று அவர் முதல் பணியாக தடுப்பூசி எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் விலகியுள்ளது பெரும் பரபரப்பை

16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட 16 வயது சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் சூர்யா-கார்த்தி பட நாயகி!

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் காண்டம் பரிசோதனையாளர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே

கொரோனாவால் நிரம்பி வழியும் சென்னை மருத்துவமனைகள்… நிலவரம் என்ன?

கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிகபட்சமாக தினம்தோறும் 7 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டன