close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் டுவிட்

Thursday, December 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது எழுபதாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நிலையில் அவருக்கு தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி இந்திய திரையுலகினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நண்பர்கள் பலர் ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்ததால் இன்று ரஜினியின் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: என் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் பல துறையில் இருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிகை, ஊடகம், தொலைக்காட்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.