close
Choose your channels

வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்: வைரல் வீடியோ

Saturday, January 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வீட்டின் முன் புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்த ரசிகர்களுக்கு கைகாட்டி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளிலும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்ல ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து இருப்பார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இன்று 2022ஆம் ஆண்டு பிறந்ததை அடுத்து இன்று காலை முதலே ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து அவருக்கு புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்தனர். இதனை அடுத்து தனது வீட்டின் வாசலில் தன்னை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து கொண்டார். மேலும் ரசிகர்களின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் அவரை ஏற்றுக் கொண்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.