close
Choose your channels

'மாநாடு' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? படக்குழுவினர் உற்சாகம்

Saturday, November 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தை பாராட்டி படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் சிம்புவுக்கு மட்டுமன்றி படக்குழுவினர்கள் அனைவருக்குமே ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஹாலிவுட் படத்திற்கு இணையாக இந்த படத்தில் பல காட்சிகள் இருக்கிறது என்பதும் டைம்லூப் என்ற கான்செப்டை இயக்குனர் வெங்கட்பிரபு மிக அருமையாக அனைவரும் புரியும் வகையில் உருவாகியுள்ளதாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ‘மாநாடு’ படத்தை பாராட்டி படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள்

சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது

நல்லது தேடி பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்சத்தில் சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.

மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி சார்’ என தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.