close
Choose your channels

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

Sunday, May 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் காலை முதலே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வந்தன என்பது தெரிந்ததே.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல நட்சத்திர திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தும் வெற்றி பெற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் உள்பட பல தேசிய தலைவர்களும் தமிழக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தனது வாழ்த்தை அவர் தெரிவித்துக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos