ரஜினிகாந்த் வாழ்த்துவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை: குக் வித் கோமாளி பிரபலம் நெகிழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தற்போது திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புகழ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல திரையுலக மற்றும் சின்ன திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆடியோ மூலம் புகழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புகழ் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என ஆடியோ மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகழ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துக்களோட இந்த நாள நான் தொடங்கறேன். திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும் னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே.

More News

அண்டர்வாட்டரில் லிப்லாக்: கர்ப்ப நேரத்தில் சீரியல் நடிகையின் ரொமான்ஸ் போட்டோஷூட்!

சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவருடன் நீருக்கு அடியில் லிப்-லாக் முத்தம் கொடுக்கும் ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில்

முதல்முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்க தான்: கமல் கூறியது யாரை?

முதல்முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கதான் என இசைவாணியை பார்த்து கமல்ஹாசன் கூறியது பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமல் முன்னிலையில் ஆக்ரோஷமாக மோதும் சிபி-அக்சரா: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 41 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கமல் முன்னிலையில் சிபி மற்றும் அக்சரா ஆகிய இருவரும் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகள் முதல் புரமோவில்

உள்ளே ஒரு கருத்து, வெளியே ஒரு கருத்து: ராஜூ குறித்து கமல் தெரிவித்த தகவல்

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ராஜுவுக்கு உள்ளே உள்ள போட்டியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், வெளியே உள்ள பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்று கமல்ஹாசன் என்று கூறியுள்ளார்

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அபிஷேக்: இதுதான் காரணமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அபிஷேக் உள்ளே செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது