சார சார காற்றே, பொங்கி வழிகிறதே சந்தோச ஊற்றே: 'அண்ணாத்த' பாடல் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ’சார சார காற்றே’ என்ற பாடல் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோச ஊற்றே

சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே

படபடவென கைகள் ரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே

பச்சை மனது பால்நிறம்
அன்பில் சிவந்து போகுதே

சற்றே இருண்ட வானிலை
உன்னழகை கண்டதுமே மின்னொளி பெறுதே

ஆகிய வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் முதல்முறை கேட்கும்போதே மனதை சுண்டி இழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பதும், இந்த மெலடி பாடலை டி.இமான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஃபேண்டஸி திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி: இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனரான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

கணவர் மறைவுக்கு பின் வேறு காதலா? பிக்பாஸ் பாவனி ரெட்டியின் சகோதரியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி சமீபத்தில் தனது உருக்கமான கதையைக் கூறினார் என்பதும் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டபோது தான் அழவில்லை என்றும்

சமூகத்தில் தான் ஒழுக்கமில்லை: சமந்தாவின் பதிவுக்கு வனிதா கூறிய கருத்து!

இந்த சமூகத்தில் தான் ஒழுக்கம் இல்லை என சமந்தாவின் கருத்துக்கு வனிதா விஜயகுமார் தனது கருத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் போதைப்பொருள் சோதனை… மீண்டும் பரபரப்பு!

பல இந்தி சினிமாக்களை உருவாக்கிய பிரபல தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹைத்ரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் போதைப்பொருள்

பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக துப்பாக்கி சூடு: கமல் அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று 6வது நாள் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் வழக்கத்தைவிட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது