சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் இரண்டு ஹாட் அப்டேட்ஸ்: இதுவரை வெளிவராத தகவல்!

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் ஜல்லிக்கட்டு கதையம்சம் கொண்டது என்பதால் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் சூர்யாவின் அலுவலத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு காளைகளுடன் சூர்யா சில மாதங்கள் பழகுவார் என்றும் அவருடன் இந்த காளைகள் நன்றாக பழகிய உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ‘வாடிவாசல்’ படத்தின் காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக உண்மையான காளைகளுடன் சூர்யா மாதக்கணக்கில் பழக முடிவு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிராபிக்ஸ் மற்றும் போலியான காட்சிகள் மூலம் ஜல்லிக்கட்டு காட்சியை பல திரைப்படங்களில் பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த படத்தில் நிஜ ஜல்லிக்கட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்திற்காக சேவல்களுடன் பல மாதங்கள் தனுஷ் பழகினார் என்பது தெரிந்ததே. அதே போல் ‘வாடிவாசல்’ படத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பழக முடிவு செய்திருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒரு தகவலாக உள்ளது.

அடுத்ததாக இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவர் சூர்யா படத்தை இயக்கியவர் என்றும் கூறப்படுகிறது. அந்த பிரபல இயக்குனர் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிகாரியாக இருந்தாலும் கேள்வி கேட்பேன்: விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' டீசர்

விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டாணாக்காரன்' என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசரில் தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியில்

பாய்ஸ் ஹாஸ்டலில் புகுந்து விளையாடும் ப்ரியா பவானிசங்கர்: ‘ஹாஸ்டல்’ டீசர்!

அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர், சதீஷ் உள்பட பலர் நடித்த 'ஹாஸ்டல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த

சீனுராமசாமியின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி, 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே. மேலும் 'நீர்பறவை

அட்டகாசமான 'வாடிவாசல்' டைட்டில் லுக்! சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் டைட்டில்லுக் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்

மது பழக்கத்தால் ஒரே ஆண்டில் 8 லட்சம் பேருக்குப் புற்றுநோய்? பகீர் தகவல்!

கொரோனா நேரத்தில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தன.