close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் மாஸ் அப்டேட்

Tuesday, January 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் இந்த படத்தின் கேரள உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கேரளாவில் பிறமொழி படங்களின் சாதனை தொகை என்பது குறிப்பிடத்தக்கது

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.