பிரபல அரசியல் தலைவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்களுடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள்ள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் நடிகர் சத்யராஜ் அவர்களும் தொலைபேசி மூலம் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோல் திரையுலகினர் பலர் மு.க.ஸ்டாலினுக்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் பிறந்த நாள். கருணாநிதி, அன்பழகனிடம் வாழ்த்து பெற்றார்.

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தொண்டர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

ரிலையன்ஸ் ஜியோ-சாம்சங் கூட்டணியில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம்

இந்தியாவில் செல்போன் உபயோகித்து வரும் பெரும்பாலானோர் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை 2ஜி தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வந்தனர். ஒருசிலர் மட்டுமே 3ஜி தொழில்நுட்பத்தை உபயோகித்து வந்தனர்...

விஜய் 61 படம் இளையதளபதியின் மூன்று முகமா?

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்...

ராணி எலிசபெத்துடன் கைகுலுக்கிய கமல்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம்  எலிசபெத் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒருவர் என்பதை நேற்று பார்த்தோம்...

நெடுவாசல் செல்கிறேன். மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் நெடுவாசல் விவசாயிகளை காப்பாற்ற அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்...