ஒன்றா இரண்டா? '2.0' படத்தில் எத்தனை பாடல்கள்?

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்து கொடுத்துள்ளதாகவும் ஒரு செய்தி வெளியானது
எனவே இந்த படத்தில் ஒரு பாடலா? அல்லது இரண்டு பாடல்களா? என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்காக இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் படத்தின் நீளம் கருதியும் விறுவிறுப்பு கருதியும் ஒரு பாடலாக குறைக்கப்பட்டது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

அணியின் முடிவை அஸ்வின் புரிந்து கொள்வார். விராத் கோஹ்லி

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்டான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொள்ளாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது...

சசிகலாவுடன் பிரபல நடிகை ரகசிய சந்திப்பு: திடுக்கிடும் திருப்பம் ஏற்படுமா?

எம்.ஜி.ஆர் ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டு இருக்கின்றது. குறைந்தபட்சம் இன்னும் நான்கு வருடங்களுக்காவது அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கருதி வருகின்றனர்...

விவேகம்: அஜித்தை முந்திய கருணாகரன்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்கிவிட்டது என்று வெளிவந்த செய்தியினை பார்த்தோம்...

சுசித்ரா வீடியோவை பார்க்க முடியாமல் போனதால் வருத்தம்: அமலாபால்

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபல கோலிவுட் நட்சத்திரங்களின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.