'நீ சாதிச்சிட்ட'. சூப்பர் ஸ்டார் ரஜினிடம் பாராட்டு பெற்ற வெற்றி பட நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரின் மூலம் விஸ்வரூபம் எடுத்த அருண்விஜய் 'வெற்றிமாறன்' என்ற கேரக்டரில் நடித்த படம் 'குற்றம் 23'. சமீபத்தில் வெளிவந்த இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படம் அருண்விஜய்யின் சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்தை பார்த்து அருண்விஜய்க்கு போன் செய்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'தனது முதிர்ச்சியான நடிப்பையும், பாடி லாங்க்வேஜையும் சூப்பர் ஸ்டார் பாராட்டியதாகவும், இந்த படத்தின் கான்செப்ட் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறிய ரஜினிகாந்த், மொத்தத்தில் நீ சாதிச்சிட்ட' என்று அவர் கூறிய வார்த்தை தன்னை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது' என்று கூறியுள்ளார்.
அருண்விஜய், மஹிமா நம்பியார், தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா, சுஜா வருனே உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'ஈரம்' புகழ் அறிவழகன் இயக்கியுள்ளார்.

More News

ரஜினி-கமல் இணைந்து பார்க்கும் பிரபல ஹீரோவின் படம்?

'சதுரங்க வேட்டை' என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

40 வருடங்களுக்கு முந்தைய மருத்துவமனையில் விஜய்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மற்றொரு முன்னணி நடிகையின் சமூகவலைதளம் ஹேக்?

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் செய்யப்படும் பதிவுகளால் கோலிவுட் பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பர பிரியரா ராகவா லாரன்ஸ்?

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் பலருக்கு ஆதரவு கொடுத்து அவர்களுக்கு கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே

தமிழ் சினிமாவில் பெண்கள்! மார்ச் 8- மகளிர் தின சிறப்பு கட்டுரை

பொதுவாக திரைத்துறை என்றால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே கருதப்படுகிறது. இந்த துறையில் ஒரு காலத்தில் பெண்கள் நடிகையாக மட்டுமே இருந்துள்ளனர். மிகவும் அபூர்வமாக ஒருசிலரே நடிப்பு தவிர மற்ற துறைகளை தேர்வு செய்து வந்தார்கள். ஆனால் தற்போது நடிப்பு மட்டுமின்றி இயக்கம், ஒளிப்பதிவு, மேக்கப், நடன இயக்குனர், பாடலாசிரியர், இசை