40 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த ரஜினி-லதா

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

கடந்த 70களில் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை லதா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'ஆயிரம் ஜென்மங்கள்' மற்றும் 'சங்கர் சலீம் சைமன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் லதா நடித்து வரும் திரைப்படம் 'நாகேஷ் திரையரங்கம். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசரை இன்று ரஜினிகாந்த் தனது வீட்டில் வெளியிட்டார். சற்று முன்னர் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகை லதா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆரி, ஆஷ்னா ஜாவேரி, லதா, சித்தாரா, மனோபாலா, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை இஷாக் இயக்கியுள்ளார். ஸ்ரீ இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு மீண்டும் ஒரு ரஜினி டைட்டில்

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஒரு படம் நடித்து அப்படம் சமீபத்தில் வெளிவந்தது.

திருப்பதி அருகே பாலாஜி கோவிலில் அர்ச்சனை செய்யும் இஸ்லாமியர்கள்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ள கடப்பா பகுதியில் உள்ள பாலாஜி கோவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கி வருகிறது.

ஒரே ஒரு தாடியை தோற்கடிக்க இத்தனை கோடியா? டி.ராஜேந்தர் கேள்வி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பாளர்களுக்கு இடையே இணைப்புகள், பதுங்குதல், பாய்தல் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன் 2', 'புதுப்பேட்டை 2' எப்போது? செல்வராகவன் பதில்

பிரபல இயக்குனர் செல்வராகவனின் திரையுலக வாழ்க்கையில் கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' ஆகிய இரண்டு படங்களும் மிக முக்கியமான படங்கள்.

12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால். ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஞாயிறு அன்று அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.