இலங்கை பயணம் ரத்து: ரஜினியின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்..

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் இலங்கை செல்லக்கூடாது என்று ஒருசில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக சற்று முன் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்: "இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது. இலங்கை பயணத்தை தவிர்த்த நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு விளம்பரம் தேடுவதற்காக நாங்கள் யாரும் தலையிடவில்லை. ரஜினிகாந்த் வந்தால் பாதகமாக அமையும் என இலங்கைத் தமிழர்கள் கூறினர். அவர் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டால் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது போல் ஆகிவிடும் சிங்களர்களின் போர் புனிதப் போர் அல்ல; தமிழர்களின் போர்தான் புனிதப்போர்".

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: "ரஜினியிடம் தொலைபேசியில் கூறியதை நான் விளம்பரம் செய்யவில்லை. விளம்பரத்துக்காக ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கவில்லை. ரஜினி தவறான தகவல்கள் அடிப்படையில் இலங்கை செல்லவிருந்தார். ரஜினி ஒரு மாபெரும் மனிதர்".

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: "இலங்கை பயணத்தை ரத்து செய்ததற்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் துன்பங்களை ரஜினிகாந்த் நேரில் கேட்டறிய வேண்டும்".

அ.தி.மு.க அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்: "தமிழர்களின் உணர்வை புரிந்து பயணத்தை ரஜினி ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்".

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: "தனது இலங்கை பயணத்தை ரத்து செய்திருக்க கூடாது. ரஜினிகாந்த் இலங்கை சென்றிருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவர் இலங்கை சென்றிருக்கலாம்" .

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா: "ராஜபக்சேவிடம் பரிசு பெற்றவர்கள் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்யக்கூடாது".

More News

ரஜினி ஒரு கோழை. சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று நேரத்திற்கு முன்னர் தான் இலங்கை செல்வதாக திட்டமிட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்தார்...

இலங்கை செல்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு

லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் தனது தாயார் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் இலங்கையில் கட்டியுள்ள 150 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று ஒருசிலர் அரசியல் தலைவர்களும், செல்ல வேண்டும் &#

ஃபேஸ்புக்கில் காதலித்து தியேட்டரில் கல்யாணம் செய்த பெண்ணின் கணவர் திடீர் மாயம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் அந்த காலம். தற்போது ஃபேஸ்புக், டுவிட்டரில் காதலித்து கல்யாணம் செய்வதுதான் டிரெண்டாக உள்ளது.

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியுடன் விஷால் டீம் சந்திப்பு

வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இளையதளபதியிடம் பாராட்டு பெற்ற தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 3.5 வயது பிரிஎல்.கே.ஜி மாணவி நேத்திரா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.